

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல மோட்டார் சைக்கிளான ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிளின் உற்பத்தியை அதிகரிக்க 3-வதுஆலையை அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிளின் புல்லட் ரகத்தில் பல் வேறு மாடல்களுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு 3-வது ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சித்தார்த் லால் தெரிவித்தார்.
என்பீல்ட் மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யும் ஆலைகள் திருவொற்றியூரிலும், ஒரகடத்திலும் செயல்பட்டு வருகின்றன. புதிய ஆலைக்காக ஒரகடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வல்லம் வடகல் எனுமிடத்தில் 50 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளதாக லால் தெரிவித்தார். இந்த ஆண்டு 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்பீல்ட் நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கு பதிவு செய்து விட்டு காத்திருக்கும் காலம் 10 மாதங்களிலிருந்து தற்போது 4 மாதங்களாக குறைந்துள்ளது. இதை மேலும் குறைக்க உற் பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ள தாகவும் நடுத்தர ரக மோட்டார் சைக் கிளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் லால் கூறினார்.