நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு!

நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு!

Published on

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 89.6 சதவீதத்தை தொட்டுள்ளது. 2014 - 15 பட்ஜெட்டில் எதிர்பார்த்தபடி, அக்டோபர் மாத இறுதியில் இது ரூ. 4.75 லட்சம் கோடியாக உள்ளது.

2013-14 ஆம் ஆண்டின், இதே காலகட்டத்தில் பற்றாக்குறை விகிதம் 84.4 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை யிலான ஏழு மாதங்களில் நிகர வரி வருமானம், பட்ஜெட் எதிர்பார்ப்பு ரூ.3.68 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது நடப்பு பற்றாக்குறையோடு ஒப்பிடும் போது இது 37.7 சதவிகிதமாக இருந்தது.

கடந்த ஏழு மாதங்களில் அரசின் செலவு 53.6 சதவிகிதமாகவும், அதாவது ரூ.9.62 லட்சம் கோடியாக உள்ளது. மொத்த செலவினங்களில் திட்டச் செலவுகளுக்கு 2.67 லட்சம் கோடியும், திட்டம் சாரா செலவுகளுக்கு 6.95 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

வருமானம் ரூ. 4.80 லட்சம் கோடியாகவும், பட்ஜெட் எதிர் பார்ப்பிலிருந்து இது 40.4 சதவிகிதமாக உள்ளது. கடந்த ஏழு மாதங்களில் அரசுக்கு வந்த வருவாய் ரூ. 4.86 லட்சம் கோடி, ஆண்டு முழுவதுமான கால அளவில் நடப்பு பற்றாக்குறையை ரூ. 3.72 லட்சம் கோடியாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு நடப்பு பற்றாக்குறை விகிதம் குறைந்துள்ளது.

2013-14 ஆம் ஆண்டில் நடப்பு பற்றாக்குறை 5.08 லட்சம் கோடியாகவும், அதாவது ஜிடிபி-யில் 4.5 சதவிகிதமாக இருந்தது. இது 2012 - 13 ஆண்டில் 4.9 சதவிகிதமாக இருந்தது. 2016-17 ஆண்டு ஜிடிபி யில் நடப்பு பற்றாக்குறை 3 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் என என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in