வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.1.50 லட்சம் வருமானவரி சலுகை: பட்ஜெட்டில் அறிவிப்பு

வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.1.50 லட்சம் வருமானவரி சலுகை: பட்ஜெட்டில் அறிவிப்பு
Updated on
1 min read

வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு ஏற்கெனவே வருமானவரிச் சலுகை அளித்துள்ள நிலையில், மார்ச் 2020-ம் ஆண்டுவரை கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரை விலக்கு அளித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2-வது முறையாக பதவி ஏற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது முதலாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதலாவது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியது.

வீட்டுக்கடன் பெற்று வட்டி செலுத்துபவர்களுக்கு வருமானவரிச் சலுகையாக தற்போது ரூ.1.50 லட்சம் அளிக்கப்பட்டு வருகிறது. இனி 2020ம் ஆண்டு மார்ச் வரை வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.1.50 லட்சம் வருமானவரிச் சலுகை அளிக்கப்படும்.

மின்னனு வாகனங்கள் வாங்க கடன் பெற்றவர்களுக்கு வட்டி செலுத்தும்போது, அதற்கு வருமானவரியில் ரூ.1.50 லட்சம் விலக்கு அளிக்கப்படும்.

அரசு வங்கிகளை வலுப்படுத்தும் நோக்கிலும், கடன் வழங்கும் திறனை அதிகரி்க்கும் வகையில் கூடுதலாக ரூ.70ஆயிரம் கோடி முதலீடு வழங்கப்படும்.

வங்கிகளின் வாராக்கடன் அளவு கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ.ஒரு லட்சம் கோடியாகக் குறையும். கடந்த 4ஆண்டுகளில் வங்கிகள், திவால் அறிவிப்பு செய்த நிறுவனங்கள், நொடித்துப் போனதாக கூறிய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கிய கடனில் ரூ.4 லட்சம் கோடியை மீட்டுள்ளன இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in