

காசோலை மோசடிகளைத் தடுப்பதற்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்ப வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கி இருக்கிறது. காசோலை கொடுப்பவர் மட்டுமல்லாமல் பெறுபவர்களுக்கும் தகவல் அனுப்ப வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
மேலும் சந்தேகம் இருக்க கூடிய காசோலைகள் அல்லது அதிக பணப்பரிமாற்றத்துக்கு அனுப்பப்படும் காசோலைகளை வாடிக்கையாளர்களுடன் தொலைபேசியில் பேசி உறுதிபடுத்திய பின்பு செயல்படுத்த வேண்டும் என்று வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இப்போ தைக்கு கார்டுகள் மூலம் நடக்கும் பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்கள் கொடுக்கப்படுகின்றன.
காசோலை மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் அவற்றைக் குறைக்க முடியும் என்று வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது ரிசர்வ் வங்கி.