காலாண்டு முடிவுகள் - அப்பல்லோ, அபோட், இந்தியா சிமென்ட்ஸ்

காலாண்டு முடிவுகள் - அப்பல்லோ, அபோட், இந்தியா சிமென்ட்ஸ்
Updated on
1 min read

அபோட் லாபம் 42 சதவீதம் உயர்வு

மருந்துப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அபோட் இந்தியா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் 41 சதவீதம் அதிகரித்து ரூ. 63.74 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 45.19 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் 2-ம் காலாண்டு விற்பனை வருமானம் ரூ. 577.42 கோடியாகும்.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 444.73 கோடியாக இருந்தது. முதல் அரையாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ. 114.57 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ. 74.90 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் பங்குகள் 0.20 சதவீதம் சரிந்து ரூ. 3,402-க்கு வர்த்தகமானது.

அப்பல்லோ மருத்துவமனை லாபம் ரூ. 91 கோடி

தனியார் மருத்துவமனையில் பிரபலமாகத் திகழும் அப்பல்லோ மருத்துவமனை செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 91.50 கோடி லாபம் ஈட்டி யுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் 5.17 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு லாபம் ரூ.87 கோடியாக இருந்தது.

மருத்துவமனையின் மொத்த வருமானம் ரூ. 1,152.85 கோடி யாகும். முந்தைய ஆண்டு இதே கால வருமானம் ரூ. 975.07 கோடியாக இருந்தது. இதே காலாண்டில் ரூ. 10 முகமதிப்புள்ள 2,000 முழுவதும் மாற்றத்தக்க டிபெஞ்சர்களை ரூ. 200 கோடிக்கு தனியாருக்கு ஒதுக்கியது. மும்பை பங்குச் சந்தையில் 1.65 சதவீதம் சரிந்து ரூ. 1,143.10-க்கு வர்த்தகமானது.

நஷ்டத்திலிருந்து மீண்டது இந்தியா சிமென்ட்ஸ்

சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 7.49 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக நஷ்டத் திலிருந்து இந்நிறுவனம் லாப பாதைக்குத் திரும்பியுள்ளது.

முந்தைய நிதி ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ. 22.53 கோடியை நஷ்டமாக சந்தித்தது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் நிறுவனம் எதிர்கொண்ட நஷ்டம் ரூ. 2.96 கோடியாகும். நிறுவனத்தின் வருமானம் ரூ.1,094 கோடியிலிருந்து ரூ. 1,136 கோடியாக அதிகரித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in