Published : 05 Jul 2019 05:09 PM
Last Updated : 05 Jul 2019 05:09 PM

10 ஆண்டுகளுக்கு 10 அம்ச திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு 10 அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது

அடுத்த 10 ஆண்டுகளுக்கு 10 அம்ச திட்டம் பட்ஜெட்டில் இடம் பெறுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

1) அடிப்படை மற்றும் சமுதாய உள்கட்டமைப்பை  உருவாக்குதல்.

2) பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் சென்றடையும் டிஜிட்டல் இந்தியா.

3) பசுமையான புவி மற்றும்  நீலமான வானத்துடன் மாசற்ற இந்தியா.

4) சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், புதிதாக துவங்கப்படும் தொழில்கள், பாதுகாப்புத் துறை உற்பத்தி, ஆட்டோ மொபைல், மின்னணு, பேட்டரிகள், மருத்துவக் கருவிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மேக் இன் இந்தியா.

5) நீர், நீர் மேலாண்மை, தூய்மையான நதிகள்.

6) நீலப் பொருளாதாரம்

7) விண்வெளித் திட்டங்கள், ககன்யான், சந்திரயான் மற்றும்  செயற்கைக்கோள் திட்டங்கள்.

8) தற்சார்பு மற்றும் உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி.

9) சுகாதாரமான சமுதாயம் – ஆயுஷ்மான் பாரத், போஷாக்குமிக்க பெண்கள், குழந்தைகள், குடிமக்கள் பாதுகாப்பு.

10) ஜன் பாகிரதியுடன் டீம் இந்தியா, குறைவான ஆளுமை, நிறைவான ஆளுமை.

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x