Published : 05 Jul 2019 03:33 PM
Last Updated : 05 Jul 2019 03:33 PM

மத்திய பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை; சலுகைகள் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும் வரி விலக்கு பெறுவதில் புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும் வரி விலக்கு பெறுவதில் புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் கடந்த இடைக்கால பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்கிறது. அதன் விவரம்:

1) தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.50 லட்சமாக நீடிக்கிறது. அதாவது, தனிநபரின் மொத்த வருமானமே ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள், விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்த வேண்டும்.  

2) ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வருமான வரி விதிப்பு மாற்றப்படவில்லை.  

3) அதேசமயம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்கள் எந்தவிதமான வருமானவரி செலுத்த வேண்டியத் தேவையில்லை.

4) பிஎப், பங்குவர்த்தகம், பரஸ்பர நிதித்திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தால் ரூ.1.50 லட்சம் வரை வ வருமானவரி விலக்கு பெற முடியும்.

5) நிரந்தர கழிவுத் தொகை விலக்கு  ரூ.40 ஆயிரமாக இருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் இது, ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

6) அஞ்சல் நிலையங்களில் டெபாசிட் செய்திருப்பவர்கள், வங்கியில் இருந்து டெபாசிட் மூலம் வட்டிவருமானம் பெறுபவர்கள் நிரந்தரக் கழிவு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இது .50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

7) 80சி மூலம் கழிவு பெறுவது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

8) வீட்டுக்கடன் வட்டியாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் செலுத்திவருபவர்கள் கழிவு பெறுவது ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.

9) வீட்டு வாடகையில் இருந்து பெறும் வரிச்சலுகை ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

இவையெல்லாம் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகை. இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பை 3 லட்சம் வரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தநிலையில் அதில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

அதேசமயம் வரி விலக்கு பெறுவதில் புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.அதன்படி, வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு ஏற்கெனவே வருமானவரிச் சலுகை அளித்துள்ள நிலையில், மார்ச் 2020-ம் ஆண்டுவரை கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரை விலக்கு அளித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனம் வாங்கினால் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு. கடன் பெற்று வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கு வட்டியில் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரியில் கழிவு பெறலாம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x