Published : 04 Jul 2019 01:29 PM
Last Updated : 04 Jul 2019 01:29 PM

பொருளாதார ஆய்வறிக்கை: முக்கிய தகவல்கள்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-ம் முறையாக பதவியேற்ற பின்பு முதல் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2019- 20 நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் எனவும், கச்சா எண்ணெய் விலை சர்வதே அளவில் குறைய வாய்ப்பு இருப்பதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளரச்சி விகிதம் 2018 - 19-ம் ஆண்டு முதல் உயர்ந்து வருகிறது. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியம் தயார் செய்த பொருளாதார ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

*  2019- 2020-ம் ஆண்டு நிதியாண்டை பொறுத்தவரையில் பேரியல் பொருளாதாரம் நிலையாக உள்ளது.

 

*கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்த்திருத்தங்கள் தொடர வேண்டும்.

 

* நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும்.

 

* கடந்த நிதி ஆண்டில் 6.4 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 5.8 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

 

* கச்சா எண்ணெய் விலை இந்த நிதி ஆண்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

* 2025-ம் ஆண்டில் இந்திய 5 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளரும்.

 

* நீண்டகால அடிப்படையில் நமது பொருளாதாரம் வளர்ந்து 8 சதவீதம் என்ற அளவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்.

 

* நாட்டின் நுகர்வு குறைந்துள்ளது பொருளாதார சரிவுக்கு காரணமாக உள்ளது. அடுத்த ஆண்டுகளில் இது சீராகும்.

 

* பொருளாதாரம் தற்போது மாற்றத்தை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. பாரம்பரிய பொருளாதார நிலைகளில் இருந்து புதிய இலக்கை நோக்கிய பயணத்தை  இந்திய மேற்கொண்டு வருகிறது.

 

* 2011- 2012-ம் ஆண்டு முதல் வீழ்ச்சியடைந்த முதலீடு அடுத்த நிதியாண்டில் அதிகரிக்கும்.

 

* பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 20 காலாண்டுகளில் இல்லாத சரிவாகும்.

 

* தொழில்துறை உற்பத்தி சரிவும், வாகனங்கள் விற்பனை வீழ்ச்சியும் இந்த மந்தநிலைக்கு காரணமாக அமைந்துள்ளன.

 

இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x