நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன் வசதி: அரசுக்கு அசோசேம் கோரிக்கை

நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன் வசதி: அரசுக்கு அசோசேம் கோரிக்கை
Updated on
2 min read

நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளிக்கின்றன. இதனால் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணையை நிறுத்திவிட்டு புதிதாக கடன் வழங்க வங்கிகளுக்கு அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று அசோசேம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்குத் தீர்வாக ஒரு முறை அளிக்கப்படும் சலுகையாக இந்த திட்டத்தை வங்கிகள் செயல்படுத்த அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று அசோசேம் தலைவர் பி.கே.கோயங்கா வலியுறுத்தியுள்ளார்.

நிறுவனங்களுக்கு தேவையான அளவு கடன் கிடைப்பதை ரிசர்வ் வங்கியும், பொதுத் துறை வங்கி களும் உறுதி செய்ய வேண்டும். மேலும் வங்கியல்லாத நிதி நிறு வனங்களுக்கு (என்பிஎப்சி) போதிய அளவு பணப் புழக்கம் உள்ளதா என்பதை இவை இரண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த திட்டமானது சிறப்பு சலு கையாக ஒருமுறை வழங்கப்படும் சலுகையாக இருக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் நலிவடைந்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத் துக்கு (என்சிஎல்டி) செல்வது மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய தொழில்களை ஊக்கு விக்கும் வகையில் ஆலை கருவி களின் தேய்மானத்துக்கு முதல் ஆண்டில் 100 சதவீத தள்ளுபடி சலுகையை முதலீட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும், நிறுவன வரி விதிப்பில் 5 சதவீதம் குறைக்கப் பட்டால் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் நிறு வனங்கள் ஒரு தவணை தொகையை திரும்ப செலுத்தாவிட் டாலும் அதை உடனே திவால் நடவடிக்கைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையானது தொழில்களை ஊக்குவிப்பதாக இருக்காது என்று துணைத் தலைவர் நிரஞ்சன் ஹிரண் நந்தானி குறிப்பிட்டார்.

2008-ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்டதைப் போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்துள்ளோம். ஆனால் அப்போது ஏற்பட்ட நெருக் கடியை விட தற்போது மிக மோச மான சூழல் நிலவுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தவணை நீட்டிப்பு, புதிய கடன் வழங்குவது தொடர்பான முடிவை வங்கிகள் சுதந்திரமாக மேற்கொள் ளும் உரிமையை வழங்கலாம் என் றும், இது தேவைப்படும் நிறு வனங்களுக்கு மட்டுமே அவ சியம் என்றும் அனைத்து நிறுவனங் களுக்கும் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

வங்கிகளிடம் மிக அதிக அளவில் நிதி உள்ளது. ஆனால் அந்த நிதி நிறுவனங்களுக்கு கிடைக்க வில்லை. நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளதாக கோயங்கா சுட்டிக்காட்டினார்.

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு நிதி கிடைப்பதில் மிகப் பெரிய தேக்க நிலை உருவாகி உள்ளது. ஆட்டோமொபைல் துறை யில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் இருந்தும் அவை அப்படியே முடங்கியுள்ளன. இது போன்ற சூழல் முன்னெப்போதும் ஏற்பட்டது கிடையாது. இதற்குக் காரணம் போதிய நிதியின்மைதான் என்று அவர் மேலும் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in