Published : 14 Aug 2017 10:19 AM
Last Updated : 14 Aug 2017 10:19 AM

ஆர்.காம் நஷ்டம் ரூ.1,210 கோடி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.1,210 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. கடனில் இருக்கும் இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.90 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது.

கடந்த 20 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறை எதிர்மறை வளர்ச்சியை சந்திக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தொலைத்தொடர்பு துறை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானமும் 33 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,361 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.3,591 கோடியாக சரிந்திருக்கிறது. நிறுவனத்துக்கு சுமார் ரூ.45,000 கோடி கடன் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x