Last Updated : 30 Aug, 2017 09:45 AM

 

Published : 30 Aug 2017 09:45 AM
Last Updated : 30 Aug 2017 09:45 AM

பங்கு விற்பனையில் ரூ.7,800 கோடி திரட்டும் என்டிபிசி

பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசியின் பங்கு விற்பனை முதலீட்டாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் மத்திய அரசின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.7,800 கோடி திரட்ட முடிவு செய்தது. நேற்றைய வர்த்தகத்தில் 32,98,18,576 பங்குகளுக்கு முழுவதுமாக விண்ணப்பங்கள் வந்திருந்தன.

‘ஆபர் பால் சேல்’ (ஓஎப்சி) முறையில் முதல் நாள் விற்பனை இருந்தது. ஒரு பங்கு விலை ரூ.168 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சிறு முதலீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று தொடங்க உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து 5 சதவீத சலுகை இவர்களுக்கு அளிக்கப்படும். 8.24 சதவீத பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 41.22 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இரண்டு நாள் விற்பனையின் மூலம் 5 சதவீத பங்குகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளன. நேற்று எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தன என்று தகவல்கள் கூறுகின்றன.

நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 2.83 சதவீத சரிவைக் கண்டது 168.40 ரூபாயில் வர்த்தகம் முடிந்துள்ளது.

நடப்பாண்டில் ஆறு அரசு நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் ரூ. 8,800 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது . மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் 2017-18 நிதியாண்டில் ரூ.72,500 கோடி திரட்டவும் இலக்கு வைத்துள்ளது.

இந்த பங்கு விலக்கல் நடவடிக்கையில் குறைந்தபட்ச பங்கு விலக்கல் மூலம் ரூ. 46,500 கோடியும், உத்திசார் விலக்கல் மூலம் ரூ.15,000 கோடியும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை பட்டியலிடுவதன் மூலம் ரூ. 11,000 கோடியைத் திரட்டுவதும் இலக்காக வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x