Published : 09 Aug 2017 10:30 AM
Last Updated : 09 Aug 2017 10:30 AM

ஐடிசி, எல் அண்ட் டி நிறுவனங்களில் எல்ஐசி பங்குகளைக் குறைக்க வேண்டும்: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) முதலீடுகளை சீர் செய்ய, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) உத்தரவிட்டுள்ளது. எல்ஐசி பல நிறுவனங்களில் கணிசமான முதலீட்டை வைத்திருக்கிறது. இதில் ஐடிசி மற்றும் எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்களில் வைத்திருக்கும் பங்குகளை 15 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது. இதற்காக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களில் அதிக சதவீத பங்குகளை எல்ஐசி வைத்திருக்கிறது. இருந்தாலும் அவை உத்தி சார்ந்த முடிவுகள் என்றும், ஐடிசி மற்றும் எல் அண்ட் டி ஆகிய முடிவுகள் உத்தி சாராத முதலீடுகள் என்றும் ஐஆர்டிஏ கூறியிருக்கிறது.

ஐடிசி நிறுவனத்தில் 16.29 சதவீத பங்குகளையும், எல் அண்ட் டி நிறுவனத்தில் 17.97 சதவீத பங்குகளையும் எல்ஐசி வைத்திருக்கிறது.

இதுதவிர கார்ப்பரேஷன் வங்கியில் 18.9 சதவீத பங்குகளும், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வங்கியில் 40.30 சதவீத பங்குகளும், சிம்ப்ளெக்ஸ் ரியால்டியில் 22.90 சதவீத பங்குகளையும் எல்ஐசி வைத்திருக்கிறது. இந்த முதலீடுகளை தொடர்வதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என ஐஆர்டிஏ தெரிவித்திருக்கிறது.

யுடிஐ நிறுவனம் பிரிக்கப்பட்ட போது அதில் இருக்கும் முதலீடுகளை அரசாங்கம் தனியாக கையாண்டது. அந்த பங்குகளை அரசாங்கம் விற்கும் போது, அதனை எல்ஐசி வாங்கியது. அதன் காரணமாக இந்த இரு நிறுவனங்களிலும் 15 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்குகள் இருப்பதாக ஐஆர்டிஏ அதிகாரி ஒருவர் கூறினார். அதே சமயத்தில் மற்ற முதலீடுகளை தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவித்தார். இது தொடர்பாக எல்ஐசிக்கு தகவல் அனுப்பட்டது. ஆனால் எல்ஐசி எங்களிடம் (ஒழுங்கு முறை ஆணையம்) என்ன கூறியது என்பதை பொதுவெளியில் வெளியிட முடியாது. இதனால் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக ஐஆர்டிஏ விரைவில் விதிமுறைகளை உருவாக்க இருப்பதாகவும், அது குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி நடக்க இருக்கும் இயக்குநர் குழுவில் விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x