Published : 16 Aug 2017 10:17 AM
Last Updated : 16 Aug 2017 10:17 AM

இவரைத் தெரியுமா?- கேதி லிவோரண்டா

ஆங்ரி பேர்ட்ஸ் செல்போன் விளையாட்டை தயாரிக்கும் ரோவியோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

இதற்கு முன்பு நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான தலைவராக இருந்தவர். நிறுவனத்தின் தலைமைச் சட்ட அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான தலைமை சட்ட அதிகாரியாக இருந்தவர். ஐரோப்பிய நாடுகளுக்கான சட்ட அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

டுர்கூ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர். கொலம்பியா சட்டக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். ஹெல்சிங்கின் பொருளாதாரப் பள்ளியில் மேலாண்மை உயர்கல்வி பட்டம் பெற்றவர்.

நிறுவனச் சட்டம், அறிவுசார் காப்பீடு, கையகப்படுத்தல், தொலைத் தொடர்பு, நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு உள்ளிட்டவற்றில் வல்லுநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x