Last Updated : 23 Aug, 2017 09:10 PM

 

Published : 23 Aug 2017 09:10 PM
Last Updated : 23 Aug 2017 09:10 PM

பொதுத்துறை வங்கிகளை இணைக்க குழு: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

பொதுத்துறை வங்கிகளை இணைப்புதற்கு குழு உருவாக்கப்படும். இந்த குழுவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“வங்கிகள் இணைப்பு இந்த குழுவின் மேற்பார்வையில் நடைபெறும். தற்போது எஸ்பிஐ தவிர்த்து 20 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளின் இயக்குநர் குழு இணைப்புக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், இணைப்பு குறித்து குழு முடிவெடுக்கும். இந்த முடிவுகள் வர்த்தகம் சார்ந்த முடிவுகளாக இருக்கும்.

இதுவரை வங்கிகளை இணைத்து சாதகமான பலன்களை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் வங்கிகள் பலம் அடைந்திருக்கின்றன. சந்தையின் அதிர்வுகளை தாங்க கூடியதாக இந்த வங்கிகள் இருக்கின்றன. பிரதமர் மோடி இந்த குழுவினை அமைப்பார்” என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இந்த குழுவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மற்றும் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது.

வங்கிகளை இணைப்பதற்கு நாங்கள் எந்த இலக்கினையும் நிர்ணயம் செய்துகொள்ளவில்லை. வங்கிகளின் இயக்குநர் குழு அனுமதியோடுதான் வங்கிகள் இணைப்பு நடைபெறும். வணிக ரீதியில் வெற்றியடைய வாய்ப்பு இருந்தால்தான் இணைப்புக்கு அனுமதி வழங்கப்படும். கொள்கை அளவிலான அனுமதி கிடைத்த பிறகு, சட்ட ரீதியிலான நடவடிக்கை மற்றும் செபியின் தேவைகளை வங்கிகள் பூர்த்தி செய்யும் இதன் மூலம் பலமான வங்கிகளை உருவாக்க முடியும் என அருண் ஜேட்லி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x