Last Updated : 09 Aug, 2017 10:29 AM

 

Published : 09 Aug 2017 10:29 AM
Last Updated : 09 Aug 2017 10:29 AM

நல்ல வேளை ஐஐஎம் தேர்வில் வெற்றிபெறவில்லை: நந்தன் நிலகேணி கருத்து

நல்ல வேளை ஐஐஎம் தேர்வில் வெற்றிபெறவில்லை. ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இணைந்திருக்க முடியாது என இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேணி தெரிவித்தார். இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) பெங்களூருவில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஐஐஎம் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறாதது என்னுடைய அதிர்ஷ்டம். அதனால் நான் வேலை தேடிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நாராயணமூர்த்தியுடன் இன்ஃபோசிஸில் இணைந்தேன். நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றினோம். அதன் பிறகு நடந்த வரலாறு உங்களுக்கு தெரியும். ஒரு வேளை ஐஐஎம் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால், ஏதேனும் சோப்பு நிறுவனம் அல்லது வேறு ஏதாவது நிறுவனத்தில் மேலாளராக இருந்திருப்பேன்.

நுழைவுத் தேர்வு

அதேபோல இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நான் இணையும் போது நுழைவுத் தேர்வு இல்லை. ஒரு வேளை நுழைவுத் தேர்வு இருந்திருந்தால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணைந்திருப்பேன் என நினைக்கவில்லை.

என்னுடைய வளர்ச்சிக்கு ஐஐடியில் நான் படித்த காலங்கள் மிகவும் முக்கியமானது. சாதாரண மாணவனாக நுழைந்தேன். ஐஐடியில் கற்றுக்கொண்டது என்னை தலைவனாக வடிமைத்தது என நிலகேணி குறிப்பிட்டார்.

பிக் டேட்டா

பிக் டேட்டாவின் உதவியினால் வேலை வாய்ப்பினை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். 70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் பிக் டேட்டாவினை நாம் பயன்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி காரணமாக அனைத்து நிறுவனங்களிலும் அதிக தகவல்கள் கிடைக்கும். இதனால் தொழிலினை விரிவுபடுத்த முடியும், வளர்ச்சி அடைய முடியும், வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும். சிறிய நிறுவனங்களுக்கு அவர்களுடைய செயல்பாடு குறித்த முழுமையான தகவல்களை சேகரிக்க முடியாததால்தான் கடன் கிடைப்பதில் பிரச்சினை இருக்கிறது என்று கூறினார்.

கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் வாராக்கடன் விஷயத்தில் ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x