Published : 24 Aug 2017 03:00 PM
Last Updated : 24 Aug 2017 03:00 PM

ரூ.1500 க்கு ரிலையன்ஸ் 4ஜி மொபைல்: முன்பதிவு இன்று தொடக்கம்

ரூ.1500 க்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி மொபைலை வழங்குவதாக அறிவித்திருந்தது அதற்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 24) தொடங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைலுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த மொபைலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் முன்பதிவு செய்யலாம்.

இணையதளத்தில் இந்த 4ஜி மொபைலை முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் உண்டு. ரிலையன்ஸ் நிறுவனத்தின் www.jio.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம், அல்லது மற்றொரு வழியான My jio மொபைல் அப்ளிகேசன் வழியாகவும் இந்த இணைய பக்கத்துக்கு செல்லலாம்.

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மூலமாகவும் இந்த இலவச ஜியோ 4ஜி மொபைலை பதிவு செய்து கொள்ளலாம்.

புக்கிங்க் செய்த மொபைல் போன் எப்போது வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி செப்டம்பர் முதல் வாரத்தில் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச ஜியோ 4ஜி மொபைலை முன்பதிவு செய்வதற்கு 500 ரூபாயை செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகை வைப்புத் தொகை செல்போனை பெறும்போது 1,500 ரூபாயில் கழித்துக்கொள்ளப்படும். மொபைலை டெலிவரி பெறுகையில் மீதத் தொகையான 1,000 ரூபாயை செலுத்த வேண்டும்.

இது தவிர இந்த ஜியோ 4ஜி மொபைலில் ஜியோ தன் 'தனா' ஆஃபர் வாயிலாக மாதம் ஒருமுறை 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்கள், மெசேஜ், மற்றும் டேட்டா என அனைத்தும் அன்லிமிடெட் ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x