Published : 09 Aug 2017 10:26 AM
Last Updated : 09 Aug 2017 10:26 AM
ஆக்ஸிஸ் வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. சேமிப்பு கணக்கில் ரூ.50 லட்சம் வரையிலான தொகைக்கு 3.5 சதவீதமாக வட்டியை நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக ஆக்ஸிஸ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், சேமிப்பு கணக்கில் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட இருப்பு தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி தொடரும் என்று கூறியுள்ளது. இந்த புதிய வரி விகிதம் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா வங்கிகள் வட்டியை குறைத்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT