Published : 08 Aug 2017 10:15 AM
Last Updated : 08 Aug 2017 10:15 AM

டாடா ஸ்டீல் நிகர லாபம் ரூ.921 கோடி

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.921 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,183 கோடியாக நிறுவனத்தின் நஷ்டம் இருந்தது. நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருந்தாலும் சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் சராசரியாக ரூ.1,043 கோடி லாபம் இருக்கும் என வல்லுநர்கள் கணித்தனர் அதேபோல ஜூன் காலாண்டில் வருமானம் 19.30 சதவீதம் உயர்ந்து ரூ.30,973 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.25,970 கோடியாக வருமானம் இருந்தது.

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 4.20 சதவீதம் உயர்ந்து 600.05 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 52 வார உச்சபட்ச விலையான 601.65 ரூபாயை தொட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x