

அடுத்த நிதி ஆண்டுக்கான (2015-16) பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் திங்கள்கிழமை தொடங்க உள்ளன. முதல் கட்டமாக செலவு பிரிவுச் செயலர் சட்டம் மற்றும் நீதித்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
2014-15-ம் நிதி ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் மதிப்பீடு மற்றும் 2015-16-ந் நிதி ஆண்டுக்கான செலவுத் தொகை ஆகியவற்றை நிதி அமைச்சகம் தயாரிக்கும். பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகளை சந்திக்கும் பணி டிசம்பர் 12-ம் தேதி வரை தொடரும். நடப்பு நிதி ஆண்டி தங்களது துறைகளின் செலவுக் கணக்குகள் மற்றும் வரும் நிதி ஆண்டில் எதிர்பார்க்கும் செலவுக் கணக்குகளை அந்தந்த அமைச்சகங்கள் அளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.