

குறைந்த வட்டி விகிதம் மற்றும் சொத்துகளின் மாறாத விலை, இதனுடன் பிரதமர் ஆவாஸ் யோஜனாவின் கீழ் வட்டி மானியம் ஆகியவற்றினால் வீடு வாங்குவோருக்கு சிக்கனம் ஏற்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.
கடந்த 15 மாதங்களில் வட்டி விகிதம் சுமார் 2% அளவுக்குக் குறைந்ததால் சிறு மற்றும் நடுத்தர வீட்டுக் கடன்களுக்கான மாதாந்திர தவணை சில சந்தர்ப்பங்களில் செலுத்தும் மாதாந்திர வாடகையை விடக் குறைவாகியுள்ளது.
உதாரணமாக, வீட்டுக்கடன் ரூ.25 லட்சம், இதற்கு வட்டி 8.5%-9% என்று வைத்துக் கொண்டால் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு பிரதமர் ஆவாஸ் யோஜனா வட்டி மானியப் பயன்களையும் சேர்த்து, வரிப் பயன்களுக்கான ஒதுக்கீடும் சரி செய்யப்பட்ட பிறகு வட்டி 4% தான் வரும். வருவாய் குறைவாக இருந்தால் மானியத் தொகை அதிகமாக இருக்கும்.
இது குறித்து ஆக்சிஸ் வங்கி தலைமை இயக்குநர் ராஜிவ் ஆனந்த் கூறும்போது, “கடந்த சில மாதங்களாக வீட்டுக் கடன் வட்டி குறைந்து வருகிறது. இதே நிலை நீடிக்காது என்றாலும் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் கடன் தொடர்பான வட்டி மானியம் ஆகியவை வீடு வாங்குவோருக்கு சிக்கனமாகியுள்ளது” என்றார்.
படி ரூ.18 லட்சம் ஆண்டு வருவாய் உள்ளோர் 1,100 சதுர அடி கொண்ட வீட்டை வாங்க பிரதமர் ஆவாஸ் யோஜனாத் திட்டத்தின் வட்டி மானியப் பயன்களைப் பெற முடியும்.
ஆக்சிஸ் வங்கி தலைமை இயக்குநர் ஆனந்த் மேலும் கூறும்போது, இதனையடுத்து கடந்த சில மாதங்களில் விற்பனை அதிகரித்துள்ளது, அதாவது ஜனவரி 2016-17 காலாண்டில் வீடு வாங்குவோர் சதவீதம் 31% அதிகரித்துள்ளது என்றார்.
இதனால், “ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருவாய்க்கு மிகாதோர், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 6.5% வட்டி மானியத்துக்கு தகுதி பெறுகின்றனர். எனவே சிறு வீடுகளுக்கான கடன்களைப் பெற இது சரியான தருணம்” என்கிறார் ஆனந்த்.
எச்.டி.எஃப்.சி. கேகி மிஸ்ட்ரியும் வீடு வாங்குவதற்கு இதுவே உகந்த சூழல் என்பதை விவரிக்கும் போது, “வட்டி விகிதக் குறைவு மட்டுமல்ல, கடந்த 2-3 ஆண்டுகளாக வீட்டு விலைகள் அதிகரிக்கவில்லை. எனவே சொத்து வாங்க இதுவே சரியான நேரம். வட்டி விகிதத்தை தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது. இன்று அரசு மானியம் கிடைக்கிறது. வரிநீங்கலாக நிகர வட்டியாகப் பார்க்க வேண்டும். அதாவது நம் கையில் இருந்து செல்லும் வட்டி எவ்வளவு என்பதே முக்கியம்” என்றார்.