Published : 24 Aug 2017 10:30 AM
Last Updated : 24 Aug 2017 10:30 AM

பாரத் வேகன் நிறுவனத்தை மூட அமைச்சரவை ஒப்புதல்

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பாரத் வேகனை மூடுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு (சிசிஇஏ) ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த பொதுத்துறை நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 626 பணியாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு 2007-ம் ஆண்டு பெற்ற சம்பள விகிதத்தின்படி விருப்ப ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். இது தவிர மற்ற செலவினங்கள் மற்றும் நிறுவனத்தின் பொறுப்புகளுக்காக மத்திய அரசு ரூ.151.18 கோடி ஒதுக்கி இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த நிறுவனம் நிதி சிக்கலில் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு ரயில்வே அமைச்சகம் நிதி உதவு செய்தாலும் கூட லாப பாதைக்கு திரும்ப முடியாததால் நிறுவனத்தை மூடுவது என்னும் முடிவு எடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x