Published : 15 Aug 2017 10:03 AM
Last Updated : 15 Aug 2017 10:03 AM

பணவீக்கம் 2.36 சதவீதமாக உயர்வு

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பால் நுகர்வோர் விலை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை சரிவால் கடந்த மாதம் நுகர்வோர் விலை குறியீடு 1.46 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

காய்கறிகளில் விலை ஜூலை மாதத்தில் 3.57 % அதிகரித்துள்ளது. மத்திய புள்ளிவிவரத்துறை இந்த விவரங்களை வெளியிடுகிறது. இதன் அடிப்படையில் ஜுலை மாதத்தில் மொத்த விலைக் குறியீடு 1.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்ந்ததால் குறியீடும் சற்று உயர்ந்துள்ளது. இது ஜுன் மாதத்தில் 0.90 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 0.63 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் உற்பத்தி பொருட்களில் விலை ஜூலை மாதத்தில் 2.18 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 2.27% சதவீதமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x