Published : 19 Aug 2017 10:50 AM
Last Updated : 19 Aug 2017 10:50 AM

விரைவில் வெளியாகிறது புதிய 50 ரூபாய் நோட்டு

மத்திய அரசு விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. பின்பு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற் போது புதிய 50 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள 50 ரூபாய் நீல நிறத்தில் உள்ளது. இந்த நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய 50 ரூபாய் நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தியின் வரைபடம், பின்புறத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த கோயிலின் வரைபடம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படு கிறது.66மிமீ*135மிமீ அளவுள்ள வகையில் புதிய 50 ரூபாய் நோட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் வாசகம் மற்றும் இலச்சினை இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x