ஜிஎஸ்டி எதிரொலி: இருசக்கர வாகன விலையை ரூ.4,150 வரை குறைத்தது டிவிஎஸ் மோட்டார்
பிரபல இருசக்கர வாகன நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டியின் நன்மையை பெறுவதற்காக இருசக்கர மாடல்கள் விலையை ரூபாய்.4,150 வரை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்டண குறைப்பு ரூ. 350 முதல் ரூ 1500 வரை வரம்பில் உள்ளது. எனினும் பிரீமியம் பிரிவு வாகனங்களின் அந்தந்த விலையைப் பொறுத்து ரூ 4,150 வரை குறைக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஹீரோ மோட்டார் கார்ப் மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற வாகன நிறுவனங்களும் ஜிஎஸ்டிக்கு பிறகு வாகன விலையை குறைந்துள்ளன.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பல பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக பைக் கார்களின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
