

ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிறுவனர். நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கிறார். 2008-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார். சமீபத்தில் இந்த வங்கி பொதுப் பங்கு வெளியிட்டது.
1996-ம் ஆண்டில் சொத்து கடன் வழங்கும், வங்கியல்லாத நிதி நிறுவனமான ஏயு பைனான்ஸியர்ஸ் நிறுவனத்தை ராஜஸ்தானில் தொடங்கினார். ஏயு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநாரவும் இருந்தவர்.
நிதியியல், கணக்கியல், தணிக்கை, கிரெடிட் ரிஸ்க் மற்றும் உத்திகள் வகுப்பது போன்றவற்றில் 21 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
சிறு கடன், தொழில் மேம்பாடு. நிதி மேலாண்மை மற்றும் மனித வள நிர்வாகத்தில் வல்லுநர்.
அஜ்மீர் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றவர். இந்திய பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்றவர். ராஜஸ்தான் மாநில நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார்.