ஐஎம்பிஎஸ் கட்டணத்தை நீக்கியது எஸ்பிஐ

ஐஎம்பிஎஸ் கட்டணத்தை நீக்கியது எஸ்பிஐ
Updated on
1 min read

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, ஐஎம்பிஎஸ் என்கிற உடனடி பண பரிமாற்றத்துக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இதன்படி ரூ.1,000 வரையிலான பரிமாற்றத்துக்கு ஐஎம்பிஎஸ் கட்டணத்தை நீக்கியுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறிய பரிவர்த்தனைகளை

ஊக்கு விக்கும் விதமாக இந்த கட்டணத்தை விலக்கிக் கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

தற்போது ரூ.1000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணமாக ரூ.5 -ஐ கட்டணம் மற்றும் சேவை வரியை வசூலித்து வருகிறது. இண்டர்நெட் மற்றும் மொபைல் போன் வழியாக வங்கிக் கணக்குகளுக்குள் உடனடியாக பணப் பரிமாற்றத்துக்கு ஐஎம்பிஎஸ் உதவுகிறது. இந்த உத்தரவு மூலம் சிறிய பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க முடியும். சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் படி ஐஎம்பிஎஸ் கட்டண விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி சட்டத்தின்படி ரூ.1,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 சேவைக் கட்டணமாக இருக்கும்.

ரூ.15 சேவைக் கட்டணம்

தவிர கட்டணம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.15 சேவைக் கட்டணம் என உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தின்படி அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in