

துபாயை தலைமையிடமாகக் கொண்ட எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளை துபாய் நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இந்த கூட்டு திட்டத்தின் மூலம் பயண சீட்டு பரிமாற்றம், விமானங்கள் புறப்படும் நேரம் போன்றவற்றையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து எமிரேட்ஸ் குழும தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியும், ஃப்ளைதுபாய் தலைவருமான எச்.எச்.ஷேக் அஹமது பின் சயீத் அல் மக்தூம் கூறுகையில், ``இந்த கூட்டு திட்டம் மூலம் துபாய் விமானச் சேவையில் மாற்றம் உருவாகும். இந்த இரண்டு விமானச் சேவை நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக தனித் தனியாக வளர்ச்சி கண்டு வருகின்றன. எனவே இவை இணைந்து செயல்படுவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்க முடியும்.” என்றார்.