

கோடக் மஹிந்திரா வங்கி, ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கையகப்படுத்தி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இப்போது பொது காப்பீட்டில் களம் இறங்குவதாக அறிவித்திருக்கிறது.
இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து கோடக் மஹிந்திரா வங்கி பெற்றுவிட்டது. பொது காப்பீடு தொடர்பாக ஏற்கெனவே காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் கொள்கை அளவில் ஒப்புதலை பெற்றிருந்தது கோடக் மஹிந்திரா வங்கி. இதன் மூலம், வங்கி, ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு, மியூச்சவல் பண்ட், வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட அனைத்து நிதி சேவைகளும் கோடக் வசம் இருக்கின்றன.
பொது காப்பீட்டுக்கு மகேஷ் பாலசுப்ரமணியனை தலைமை செயல் அதிகாரியாக வங்கி நியமித்திருக்கிறது. அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இதற்கான முறையான அனைத்து அனுமதியும் வாங்கப்படும் என்றும், 2-ம் காலாண்டில் செயல்பாடுகள் தொடங்கும்.