

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது.
இன்று காலை வர்த்தக துவக்கத்தின்போது, சென்செக்ஸ் 326.62 புள்ளிகள் உயர்ந்து 28.765.53 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது.
நிப்டியும் 97.20 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து 8,591.40 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது.
வங்கித்துறை, அட்டோமொபைல் துறை பங்குகள் ஏறுமுகத்தில் உள்ளன.
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை மீதான சீராய்வுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதும், செப்டம்பர் மாதத்துடன் முடியும் காலாண்டு நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறியீடு இன்று பிற்பகல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலும் பங்குச்சந்தைகள் ஏற்றமுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.