

வங்கி கணக்குகளைச் சரிபார்க்க 3,768 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளி நாடுகளிலிருந்து நன்கொடை செலுத்தப்படும் வங்கிக் கணக்கு களைச் சரிபார்த்துக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. அப்படி சரிபார்க்க வில்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
வெளிநாடு நன்கொடை பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகளை ஒரே வங்கி கணக்கில் பெற வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பல் வேறு தன்னார்வ தொண்டு நிறுவ னங்கள் நன்கொடை செலுத்தப்படும் வங்கி கணக்குகளைச் சரிபார்த்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக வங்கிகள் எப்சிஆர்ஏ தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவிப்பதில் வங்கிகளுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.
இதன் காரணமாக தற்போது உடனடியாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வங்கி கணக்குகளைச் சரிபார்த்து இதுதொடர்பான தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 2,025 தன்னார்வ நிறுவனங்கள் கணக்குகளைச் சரிபார்க்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சமீபகாலமாக தன்னார்வ தொண்டு நிறுவனங் களுக்கான விதிமுறைகளை கடுமை யாக்கி வருகிறது. ஏற்கெனவே எப்சிஆர்ஏ சட்டத்தின் கீழ் வெளி நாட்டு நன்கொடைகள் பற்றி தகவல் தெரிவிக்காத 10,000 அரசு சாராத தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.