

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலால் இந்தியாவின் கடனை திருப்பி அளிக்கும் திறன் மேம்படும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் கூறியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தி யாவின் கடன் திருப்பி செலுத்தும் திறன் மேம்படுவதுடன், ஜிடிபி வளர்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தி யங்களும் உருவாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஜிஎஸ்டி சட்டம் வரி சிக்கல்களுக்கான தீர்வுகளை எளிதாக்குவதுடன், இதன் மூலம் அரசின் வருவாய் உயரும் என்றும் கூறியுள்ளது. இந்திய தொழில்துறை அமைப்பான சிஐஐ, ஜிஎஸ்டி சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருந்ததையும் மூடி’ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாக இந்த புதிய வரி விதிப்பு முறையால் இந்தியாவில் தொழில் புரிவதற்கான சூழல் எளி தாகும், புதிதாக தொழில் தொடங்கு பவர்கள் விரைவாக தொழிலை தொடங்க முடியும் என்றும் கூறி யுள்ளது. மூடி’ஸ் முதலீட்டாளர் சேவையை சேர்ந்த துணைத் தலைவர், வில்லியம் பாஸ்டர் கூறுகையில், ஜிஎஸ்டியால் நடுத்தர கால அளவில் இந்தியாவின் ஜிடிபி அதிகரிக்கும் என்று எதிர் பார்ப்பதாகவும், தொழில் புரிவதை எளிதாக்கவும், தேசிய அளவிலான சந்தையை ஒருங்கிணைப்பது மற்றும் அந்நிய முதலீட்டு இலக்கு களை எட்டவும் உதவி புரியும் என்றார்.
இந்தியாவின் வரி வருவாய் அதிகரிப்பதுடன், வரிச் சிக்கல் தீர்வுகளும் மேம்படும். இதன் காரணமாக இந்தியாவின் கடனை திருப்பி அளிக்கும் திறனில் சாதக மான சூழல் உருவாகும். குறை வான வருவாய் என்கிற நிலை கட்டுப்படுத்தப்படும்.
வரி சார்ந்த புகார்களுக்கு ஜிஎஸ்டி தீர்வாக இருக்கும் என் றும், குறிப்பாக ஜிஎஸ்டி சட்டத் தில் உள்ள உள்ளீட்டு வரிவரவு (இன்புட் டாக்ஸ் கிரெடிட்) என்பது தொழில்துறையை ஊக்கப்படுத் தும் விதமாக இருக்கும். நாடு முழுவதும் வரிச் சிக்கல் புகார்கள் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் தீர்ப்பதும் எளிது, மேலும் வருமான வரி நிர்வாக கட்டமைப்பை மத்திய மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள முடியும். இதன் காரணமாகஅரசின் வருவாயில் ஜிஎஸ்டி சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
சிஐஐ தலைவர் ஷோபனா காமினேனி இது தொடர்பாக கூறியபோது, அரசு எங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை உரு வாக்கியுள்ளது. முதலீடுகளை எளிதாக்குவது மற்றும் தொழில் புரிவதற்கான சாதகமாக சூழலை உருவாக்குவதை அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்தி யாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஏற்ப ஜிஎஸ்டி சட் டத்தை மிகப்பெரிய அளவில் வெற்றிபெற வைக்க சிஐஐ உறுதி யளிக்கிறது என்றும் குறிப் பிட்டிருந்தார்.
ஜிஎஸ்டியால் தொழில் துறைக்கு கிடைக்கும் நன்மைகளை விளக்கும் விதமாக இந்தியா முழுவதும் 100 மையங்களை சிஐஐ நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார். ஜிஎஸ்டியில் உள்ளீட்டு வரி வரவு என்கிற மிகச் சிறந்த ஊக்க நடவடிக்கை இருக்கிறது. ஒவ் வொரு தொழிலுமே இதை பயன் படுத்தலாம். இதன் காரணமாக வரி மேல் வரி விதிப்பு தவிர்க்கப் படுகிறது என்றும் காமினேனி கூறினார்.