

ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் திவால் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் மூலம் திவால் நடைமுறைகளை மேற்கொள்ள இருக்கும் முதல் நிறுவனமாக இந்த நிறுவனம் இருக்கும். இந்த நிறுவனத்தால் ரூ.7,000 கோடி கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
தீர்ப்பாயத்தின் அனுமதி கிடைத்ததால், ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு கலைக்கப்படுகிறது. ஆலோசனை நிறுவனமான பிடிஓ நிறுவனம் இதை நடத்தும்.வங்கிகளின் நடவடிக்கைக்கு இந்த நிறுவனம் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
கடந்த நிதி ஆண்டில் ரூ.1,482 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் வருமானம் ரூ.852 கோடி மட்டுமே. முன்னதாக இந்த நிறுவனம் கடனை மறுசீரமைப்பு செய்தது. ஆனால் திட்டமிட்டப்படி கடனை செலுத்த முடியவில்லை என்பதால் இந்த நடவக்டிகை எடுக்கப்பட்டது. பிரச்சினையில் இருக்கும் 12 நிறுவனங்களை இந்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. இந்த நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் கோடி செலுத்த வேண்டும்.