

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தேக்க நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலினா மெர்கல் எச்சரித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கான சந்தை வாய்ப்புகளை நாம் உருவாக்காமல் வளர்ச்சி சாத்தியமாகாது. இதற்கான சூழலை துரிதப்படுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தேக்க நிலையில் சிக்கிக் கொள்ளும் என்று ஐரோப்பிய நாடுகளின் தொழில்முனைவோர் மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.
கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச பொருளதார வரைபடத்தில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் இதில் பின்தங்கிவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுடனான தாராள பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்படும் வாய்ப்புகளை தவிர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.