Published : 21 Jul 2017 09:15 AM
Last Updated : 21 Jul 2017 09:15 AM

இவரைத் தெரியுமா?- கிறிஸ்டியன் ரமல்

சீமென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதே நிறுவனத்தின் செயல் இயக்குநர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

ஐரோப்பிய மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2014-ம் ஆண்டு ஜனவரி வரை சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் 27 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்.

2006-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

சீமென்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் நிதிப் பிரிவுக்கு தலைவராக இருந்தவர்.

அமெரிக்காவில் உள்ள மாலிகியூலர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x