Published : 29 Jul 2017 10:39 AM
Last Updated : 29 Jul 2017 10:39 AM

இவரைத் தெரியுமா?- ஆண்ட்ரூ ஆர் ஜேஸி

உலகின் முன்னனி நிறுவனமான அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் அமேசான் டாட் காம் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இதே நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

2005-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை அமேசான் டாட் காம்-க்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

கெளபா சாஃப்ட்வேர் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

1997-ம் ஆண்டு அமேசான் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியாளராக பணிக்குச் சேர்ந்தவர்.

கெளபா சாஃப்ட்வேர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம், கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x