

வருமான வரித்துறையினர் வரி செலுத்துவோரின் வசதிக்காக `ஆயகர் சேது’ (Aayakar Setu) எனும் செயலியை (ஆப்)அறிமுகம் செய்துள்ளனர். வரி தொடர்பான சந்தேகங்களுக்கு இந்த செயலி மூலம் விடை கிடைக்கும். இந்த செயலி மூலம் நிரந்தர கணக்கு எண் (பான்) உடன் ஆதார் அடையாள எண்ணை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டிராய்டு இயங்குதளத்தில் செயல்படும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும். இதுதவிர பின்வரும் எண்ணுக்கு அழைப்பு (மிஸ்டு கால்) கொடுப்பதன் மூலம் உங்களது மொபைலுக்கு இந்த செயலி பதிவேற்றம் செய்யப்படும். மொபைல் எண்: 7306525252. தற்போது இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டிருப்பது வரி செலுத்துவோருக்கு மிகவும் உபயோகமானதாகஇருக்கும்.