Published : 20 Nov 2014 09:55 AM
Last Updated : 20 Nov 2014 09:55 AM

அர்ஜுன் ஹாண்டா - இவரைத் தெரியுமா?

$ குஜாராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த கிளாரிஸ் லைப் சயின்சஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

$ இவரது தந்தை சுஷில் ஹாண்டா ஆரம்பித்த நிறுவனத்தை இவரும் இவரது சகோதரர் ஆதித்யா ஹாண்டாவும் இணைந்து நடத்துகிறார்கள்.

$ 2001-ம் ஆண்டு இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு சில காலம் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக (சி.ஓ.ஓ.) இருந்தார். அதன் பிறகு அதே ஆண்டு சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். 2014 செப்டம்பர் 26-ம் தேதி முதல் தற்போதைய பொறுப்பில் இருக்கிறார்.

$ அகமதாபாத் ஹெச்.எல். கல்லூரியில் கணக்கு பதிவியலில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர்.

$ மருந்து துறையை பற்றிக் கொஞ்சமும் தெரியாமல்தான் இந்த துறைக்கு வந்திருக்கிறார். அதன் பிறகு ஆய்வகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பிரிவுகளுக்கு மாதக்கணக்கில் நேரடியாக சென்று கற்றுக்கொண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x