

டார்ஜிலிங் மாவட்டத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் தேயிலை ஏற்றுமதியில் பாதிப்புகள் உருவாகும் என்று தர மதிப்பீடு நிறுவனமான ஐசிஆர்ஏ கூறியுள்ளது.
அரசியல் அமைதியின்மைக்கு தற்போது டார்ஜிலிங் உதாரணமாக உள்ளது. முக்கியமாக தேயிலைத் தோட்டங்கள் நிறைந்துள்ள மாவட்டத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் இரண்டாம் பருவத்தில் பறிக்கப்படும் தேயிலை பறிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று ஐசிஆர்ஏ அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதியிலும் டார்ஜிலிங் மாவட்டத்தின் இந்த குறிப்பிட்ட பருவ தேயிலை அதிக தரம் கொண்டது. வரலாற்று ரீதியாகவே அதிக வரவேற்பு இதற்கு உள்ளது.
இந்த போராட்டம் காரணமாக தற்போதுவரை ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் ரூ.150 கோடி வரையில் வருவாய் இழப்பு இருக்கும் என்று கூறியுள்ளது. இந்த போராட்டம் நீண்ட காலத்துக்கு நீடித்தால் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளது.