Published : 05 Jul 2017 03:39 PM
Last Updated : 05 Jul 2017 03:39 PM

அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.200 நோட்டு விரைவில் அறிமுகமாகிறது

அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் ரூ.200 நோட்டு அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு அதிக தேவை உருவாகியுள்ளதால் புதிய 200 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி ஆர்டர் அளித்துள்ளதாக தகவலறிந்த உயரதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் புதிய 200 ரூபாய் நோட்டு மாதிரியை ரிசர்வ் வங்கி உறுதிபடுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சகத்துடனான ஆலோசனைக்கு பிறகு மார்ச் மாதத்திலேயே புதிய 200 ரூபாயை கொண்டுவர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டு பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும்.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு புதிதாக ரூ.2,000 மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக ரூ.200 நோட்டுகள் அறிமுகமானால் பரிவர்த்தனைகள் எளிதாகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.புதிய ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தும் செய்தியால் திரும்பவும் பணமதிப்பு நீக்கம் நடைபெறுமோ என்கிற அச்சத்தையும் சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். புதிய நோட்டு சர்வதேச தரத்தில் இருக்கும் என்றும் , சில ஆண்டுகள் இடைவெளியில் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் மாற்றப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x