Published : 18 Nov 2014 12:08 PM
Last Updated : 18 Nov 2014 12:08 PM

டெல்டா விவசாயிகள் போராட்டத்துக்கு தமிழக கட்சிகள் ஆதரவு

காவிரி பாசன டெல்டா விவசாயி கள் நடத்தும் போராட்டத்துக்கு பாமக, இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியன ஆதரவு தெரிவித்துள் ளன.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது: மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை களை கட்டுவதற்கான பணிகளை கர்நாடக அரசு தொடங்கியிருக் கிறது. இதனை கண்டித்து தஞ்சா வூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசா யிகள் வரும் 22-ம் தேதி முழு அடைப்பு, சாலை மறியல், தொடர்வண்டி மறியல் போராட் டங்களுக்கு அழைப்பு விடுத்துள் ளனர். காவிரி பாசன மாவட்டங் களின் வளங்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது. எனவே, வரும் 22-ம் தேதி காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் நடத்தும் போராட் டங்களுக்கு பாமக ஆதரவளிக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டப்பட்டால் மேட்டூர் அணைக்கு வரும் உபரிநீர் தடுத்து நிறுத்தப்படும். இதனால் மழைக்காலங்களில்கூட மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவை எட்டாது. கர்நாடக அரசின் தடுப்பணை திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நடத்தவுள்ள ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என அக் கட்சியின் தலைவர் என். ஆர். தனபாலன், ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x