

* கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவு இந்திய தலைவர். 2017 ஜனவரி மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
* இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா சார்ந்த தகவல் தொழில்நுட்ப துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். 2009-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2013-ம் ஆண்டு மார்ச் வரை மைக்ரோசாப்ட் மலேசியா நிறுவனத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில் தீர்வுகளுக்கான பொது மேலாளராக பணியாற்றினார்.
* 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு அக்டோபர் வரை மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மண்டல இயக்குநராகவும், அதற்கு முன்பு நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை சார்ந்து பல்வேறு பிரிவுகளில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.
* குஜராத்தில் உள்ள மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம், புனேயில் உள்ள சிம்பியாஸின் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.