

ஏயூ ஸ்மால் பைனான்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு கடந்த வெள்ளிக்கிழமை அன்று முடிவடைந்தது. நிறுவனம் திரட்ட நினைத்த தொகையை விட 53 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால் இரண்டாம் நாள் 1.36 மடங்கு அளவுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்தன.
ரூ.1,912 கோடிக்கு, 3,76,95,520 பங்குகளுக்கு வெளியிட நிறுவ னம் திட்டமிட்டது. ஆனால் 2,01,85,67,104 பங்குக்கு விண்ணப் பங்கள் வந்திருக்கின்றன.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 78.77 மடங்கு விண்ணப்பங்களும், இதர முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 143.51 மடங்கு விண்ணப்பங்களும், சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 3.4 மடங்கு விண்ணப்பங்களும் வந்தன. இதுதவிர 34 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களிடமிருந்து 563 கோடி நிதி திரட்டியது.
ஒரு பங்கின் விலையாக ரூ.355-358 நிர்ணயம் செய்யப்பட்டது.
சிறிய வங்கி தொடங்குவற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி அனுமதியை இந்த நிறுவனம் பெற்றது. கடந்த ஏப்ரல் முதல் இந்த நிறுவனத்தின் வங்கி செயல்பாடுகள் தொடங்கின.