Published : 05 Jul 2017 03:40 PM
Last Updated : 05 Jul 2017 03:40 PM

இவரைத் தெரியுமா? - சூ சிட்டா

# பொருளாதார ஆலோசனை நிறுவனமான டிலோய்ட் சீனா நிறுவனத்தின் தலைமை பொருளாதார அறிஞர். 2014-ம் ஆண்டிலிருந்து இந்த பதவியில் உள்ளார்.

# சீனாவின் வர்த்தக வங்கியான ஐசிபிசி ஆசியா, பிரான்ஸை சேர்ந்த சோஸியேட் ஜெனரலி வங்கி ஆகியவற்றில் பொருளாதார தலைவராக இருந்தவர்.

# 1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் பிராந்திர பொருளாதார அறிஞராக பணியாற்றினார்.

# ஸ்டார்ண்டர்டு அண்ட் பூர் குழுமத்தின் எம்எம்எஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்காக இந்தோனேசிய, கொரியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கான பொருளாதார அறிஞராக இருந்தவர்.

# சீன மாகாண பொது நிறுவனமான ஹூனான் வலின் உருக்கு நிறுவனத்தின் தினசரி பொறுப்புகள் இல்லாத இயக்குநராகவும் உள்ளார்.

# பீக்கிங் பல்கலைக் கழகத்தில் பிஏ பொருளாதாரம், கனெட்டிகட் பல்கலைக் கழகத்தில் எம்ஏ பொருளாதாரம் பட்டம் பெற்றவர். பாஸ்டன் மேலாண்மைக் கல்லூரியில் நிதியியலில் உயர்கல்வி முடித்துள்ளார்.ஸ்டான்போர்டு உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில் வருகை பேராசிரியராகவும் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x