Published : 27 Jan 2014 04:47 PM
Last Updated : 27 Jan 2014 04:47 PM

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 426 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று (திங்கள்கிழமை) கடும் வீழ்ச்சி நிலவியது. மும்பை பங்குச்சந்தையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு, சென்செக்ஸ் அதிகபட்ச சரிவை அடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 426 புள்ளிகள் (2 சதவீதம்) வீழ்ச்சி கண்டு 20,707 ஆக இருந்தது.

அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 131 புள்ளிகள் சரிந்து (2.1 சதவீதம்) 6,136 ஆக குறைந்திருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி தமது மூன்றாவது காலாண்டு நிதிக் கொள்கைகளை நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடுகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேலும் கடனுக்கான வட்டித் தொகையை அதிகரிக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியானதன் காரணமாக, முதலீட்டாளர்களிடையே பங்குகளை விற்கும் போக்கு அதிகமாகக் காணப்பட்டது.

அதேபோல், அமெரிக்கா மற்றும் சீனாவில் நிலவும் மிகவும் பலவீனமான பொருளாதார சூழல் பங்குச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

குறிப்பாக, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட வீழ்ச்சி, இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதிதான் சென்செக்ஸ் இந்த அளவுக்கு அதிகபட்ச சதவீத சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x