Last Updated : 03 Mar, 2017 04:30 PM

 

Published : 03 Mar 2017 04:30 PM
Last Updated : 03 Mar 2017 04:30 PM

குறைபாடுடைய விமான என்ஜின்களால் வீழ்ந்ததுதான் கிங்பிஷர்: விஜய் மல்லையா

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு குறைபாடுடைய விமான என்ஜின்களும் ஒரு காரணம் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பயணிகள் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்ககம், விமான என்ஜின்களை வழங்கிய பிராட் & விட்னி நிறுவனத்தின் என்ஜின்களை டிஜிசிஏ சோதனை செய்ய முடிவெடுத்த நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன தலைவர் விஜய் மல்லையா, “பிராட் & விட்னி மீது விசாரணை தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சோகமாக வீழ்ச்சியடைந்ததற்கு இந்நிறுவனத்தின் குறைபாடுடைய என்ஜின்களும் ஒரு காரணமாகும்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஓடும் ஏர்பஸ் 320 நியோ-பிளேன்களில் பிராட் & விட்னி என்ஜின்கள் உள்ளன என்பதால் அந்நிறுவனத்தின் என்ஜின்கள் குறைபாடுடையவை என்ற புகாரின் அடிப்படையில் அந்த என்ஜின்களை சோதனை செய்ய டிஜிசிஏ முடிவெடுத்து விசாரணை தொடங்பட்டுள்ளது. இதனையொட்டியே மல்லையாவும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

பிராட் & விட்னி குழுமத்தைச் சேர்ந்த ஐ.ஏ.இ. நிறுவனத்தின் விமான என்ஜின்கள் இண்டிகோ மற்றும் கோ ஏர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இவ்விமானங்களில் அடிக்கடி இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனையடுத்து 21 என்ஜின்களை சோதனை செய்ய டிஜிசிஏ முடிவெடுத்தது.

இந்நிலையில் மற்றுமொரு ட்வீட்டில் மல்லையா, “பிராட் & விட்னி குழுமத்தின் ஐஏஇ நிறுவனத்தின் மீது நாங்கள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தோம்” என்றார்.

இந்நிலையில் பிராட் & விட்னி குழுமத்தின் 21 விமான என்ஜின்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் அடுத்த 2 வாரங்களில் முடிவடையும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x