

பெண் தொழில்முனைவோர் களுக்கு மூன்று நாட்கள் இலவச பயிற்சியை தொழில்துறை அமைப்பான டை குளோபல் வழங்க உள்ளது. பெண்களின் பொருளாதார ஆளுமை மற்றும் தொழில் முனைவு சார்ந்த சாலை வழி விழிப்புணர்வு பிரசார திட்டத் தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அளவில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இளம்பெண்களின் தொழில்முனைவு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த பயிற்சியை வழங்க உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பு கோயம் புத்தூர், வாராங்கல், ஜெய்ப்பூர், நாகபுரி, தூர்காபூர் என ஐந்து நக ரங்களில் நடைபெற உள்ளது. கோயம்புத்தூரிலும் வாரங்கலி லும் பிப்ரவரி மூன்றாவது வாரத் தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கு கின்றன. அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் இதர நகரங்களில் நடை பெற உள்ளன. ஒரு பயிற்சி வகுப்பில் 25 தொழில்முனைவோர் கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றும், இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 5 நபர் களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு அவர்களின் தொழில் முயற்சி களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றும் டை அறிக்கையில் கூறியுள்ளது. இந்த பயிற்சிக்கான நிதி உதவியை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்கிறது. ஜனவரி 5 முதல் ஜன வரி 27 ம் தேதிவரை ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண் டிய இணையதள முகவரி: