Published : 03 Oct 2013 03:50 PM
Last Updated : 03 Oct 2013 03:50 PM

நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையும்: ப.சிதம்பரம்

தங்க இறக்குமதி குறைந்து வருவதினால் நடப்பு நிதி ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 70 பில்லியன் டாலர்களுக்கு கீழே இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறித்த தகவல்கள் வெளிவந்த இரண்டு நாட்களுக்கு பிறகு நிதி அமைச்சர் இக்கருத்தைச் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. (முதல் காலாண்டில் 21.8 பில்லியன் டாலர்கள் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இருந்தது. இது ஜி.டி.பி.யில் 4.9 சதவிகிதம்)

முதல் காலாண்டில் தங்க இறக்குமதி 345 டன்களாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இரண்டாம் காலாண்டில் 63 முதல் 64 டன்களாகத் தான் இருக்கிறது (செப் 25 வரை). தங்க இறக்குமதி வேகமாக குறைந்திருப்பதினால் பற்றாக்குறையும் குறையும் என்று ஜம்மு காஷ்மீர் வங்கியின் பிளாட்டினம் ஜுப்ளி (75-வது ஆண்டு) விழாவில் சிதம்பரம் பேசினார்.

இந்த தொடக்கம் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. 70 பில்லியன் டாலருக்கு கட்டுப்படுத்துவோம் என்று சொல்லி இருந்தோம். அதுபடியே நடக்கும். இரண்டாம் காலாண்டு முடிவுகள் வந்த பிறகு, இதைவிடவும் முன்னேற்றம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ரூபாயை பற்றி பேசும்போது, இப்போதைக்கு 62-63 என்ற நிலையில் ரூபாய் வர்த்த கமாகிவருகிறது. டாலருக்கான தேவை பூர்த்தியடைந்தாகவே நினைக்கிறேன். டாலர்களிலும் மற்ற கரன்ஸிகளிலும் பணம் பார்த்தவர்கள், அந்த பணத்தை கூடியவிரைவில் இந்தியாவுக்கு கொண்டுவருவார்கள். கூடிய விரைவில் முதலீடு அதிகரிக்கும், இதற்கு எப்படியும் மூன்று வாரங்கள் ஆகும்.

விரைவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாயை தொடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x