

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த அமெரிக்க நிறுவனங்கள் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய இந்திய நிறுவனங்களின் கொள்கைகளை பின்பற்றுகின்றன. இந்திய நிறுவனங்களின் பயிற்சிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பத்து நகரங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக் கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிஃபோர்னி யாவை தலைமையிடமாகக் கொண்டது யுஎஸ்டி குளோபல் நிறுவனம். தகவல் தொழில்நுட்ப துறைக்கு தேவையான பயிற்சி களை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஒ சஜன் பிள்ளை ’’இந்திய பயிற்சி முறை உணர்வுபூர்வமான தன்மை கொண்டது என்றும், 2015ல் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்த பயிற்சி முறையை எடுத்துச் செல்ல உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யுஎஸ்டி குளோபல் நிறுவனம் உலகம் முழுவதிலிருந்தும் 20 ஆயிரம் பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்துள்ளது. இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.
பதினான்கு வருடங்களாக தொழில் நுட்ப நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து திறன் மேம்பாடு பயிற்சிகளை அளித்து வருகிறது இந்த நிறுவனம்.
உலகம் முழுவதும் மக்க ளின் தேவைக்கு ஏற்பவும், நாடு களில் தேவைக்கு ஏற்பவும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண் டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எங்களிடம் பயிற்சி பெற்ற 200 பெண்கள் அமெரிக்காவின் ஆறு நகரங்களில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் 2020க்குள் 5000 சிறுபான்மை பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் அனைத்து நகரங்களிலும் இந்த பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிள்ளை மெக்சிகோ அரசு 30,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்க அழைப்பு விடுத்துள்ளது என்றார்.
திருவனந்தபுரத்தில் பட்டமும், பொறியியல் படிப்பும் முடித்த சஞ்சன் பிள்ளை சமீபத்தில் ஸ்டீம் கனெக்டர் நிறுவனத்தின் சிறந்த 100 சிஇஒ பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.