Published : 30 Jan 2017 10:26 AM
Last Updated : 30 Jan 2017 10:26 AM

பட்ஜெட்டில் சேவை வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

சேவை வரியை 16-18 சதவீதமாக மத்திய அரசு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 15 சதவீதமாக சேவை வரி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. சேவை வரி அதிகரிக்கப்படும் பட்சத்தில் விமான கட்டணம், தொலைபேசி கட்டணம், உணவக கட்டணம் ஆகியவை அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரிக்காக பரிந்துரைக்கப்பட்ட வரி விகிதத்துக்கு இணையாக சேவை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. உற்பத்தி வரி, சேவை வரி உள்ளிட்ட அனைத்து வரி விகிதங்களும் நீக்கப்பட்ட வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டியை மத்திய அறிமுகப்படுத்துகிறது.

ஜிஎஸ்டிக்காக 4 வகையாக வரி விகிதங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 5,12,18 மற்றும் 28 சதவீத வரி விகிதங்கள் பரிந்துரையில் உள்ளன. அதனால் சேவை வரியை 18 சதவீதத்துக்கு அருகே அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வரித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சில வரித்துறை வல்லுர்கள் சேவைகளை இருவகையாக பிரித்து அடிப்படை சேவைகளுக்கு 12 சதவீதமும், சொகுசு சேவைகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ஜேட்லி சேவை வரியை 0.5 சதவீதம் உயர்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x