Published : 07 Nov 2014 10:50 AM
Last Updated : 07 Nov 2014 10:50 AM

ஒரு கவிஞரின் கை மணம்

சென்னையில் பட அலுவலகங்கள் நிறைந்த கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரசவாக்கம், கே.கே.நகர் ஆகிய ஐந்து பகுதிகள்தான் இன்றைய கோலிவுட். நாளைய நாயகன், நாயகி, குணச்சித்திர நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள் என ஆயிரக்கணக்கான கனவுலகவாசிகளின் வேடந்தாங்கலான இந்தப் பகுதிகளில் உதவி இயக்குநர்கள் கூடி ஒரேயொரு தேநீரில் ஒருவேளை பசியாறும் டீக்கடைகள் ரொம்பவே பிரபலம்.

தற்போது கே.கே.நகர் காமராஜர் சாலையில், இயக்குநர் பார்த்திபனின் அலுவலகம் அருகே இருக்கும் ‘கவிஞர் கிச்சன்’ உதவி இயக்குநர்கள், வளரும் பாடலாசிரியர்களின் ஜமாவாகியிருக்கிறது. படப்பிடிப்பு இல்லாத நாள்களில் கையில் பணம் இல்லாவிட்டாலும் முகம் வாடாமல் இங்கே பசியாற வருகிறார்கள். அவர்களிடம் பைசாகூட வாங்காமல் அவர்களுக்குப் பசியாற்றியபடி இந்த விரைவு உணவகத்தை லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் 28 வயதான ஜெயங்கொண்டான். இவர் ஒரு வளர்ந்து வரும் பாடலாசிரியர். ”அப்பா அம்மா விருப்பத்துக்காக டிப்ளமோவில் கூட்டுறவு படித்தேன்.

ஆனால் சிறு வயதுமுதலே திரைப்பாடல்கள் மீது தனியாத தாகம். வெற்றிபெற்ற பாடல்களுக்கு எனது வரிகளை நிரப்பிப் பார்க்கும் வேலையை எட்டாம் வகுப்பில் ஆரம்பித்தேன். பதினேழு வயதில் 25 ரூபாயுடன் சென்னைக்கு வந்த எனக்கு அடைக்கலம் கொடுத்தது உணவகங்கள்தான். சாப்பாட்டு மேஜைகளைத் துடைப்பதில் ஆரம்பித்துப் பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ரெசிபிகளைச் சமைக்கக் கற்றுக் கொண்டேன். செட்டிநாட்டுச் சமையல் ரொம்பப் பிடிக்கும். கையில் சமையல் தொழில் இருந்தாலும் நான் நேசிக்கும் தொழில் கவிதைதான்.

வேடப்பன் என்ற படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகு காட்டுமல்லி, சோக்கு சுந்தரம் என ஒரு டஜன் படங்களுக்கு எழுதிவிட்டேன். என் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு அமையவில்லை. இப்போது பாக்யராஜ் சார் இயக்கும் துணை முதல்வர் படத்தில் எனக்கு ஒரு பாடல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்று சொல்லும் ஜெயங்கொண்டானின் இயற்பெயர் மகேஷ். சொந்த ஊர்ப் பெயரைத் தனது புனைபெயராக்கியிருக்கும் இவரது கவிஞர் கிச்சனின் பரோட்டாவுக்கும் சிக்கனுக்கும் சூரி பெரிய ரசிகராம்.

இவரது எளிய உணவகத்துக்கு வருகை தந்த நட்சத்திரங்களின் புகைப்படங்கள் புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்பிரைஸ் சைடு டிஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x